News
டாடாவின் கதையை படமாக எடுக்கும் சூரரை போற்று இயக்குனர்!
தமிழ் சினிமாவில் முதல் படத்தின் மூலமாகவே மிகவும் பிரபலமானவர் இயக்குனர் சுதா கொங்கரா. இறுதி சுற்று திரைப்படம் இவரின் முதல் படமாகும். இந்த படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இவருக்கு தமிழில் வரிசையாக திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. தற்சமயம் இவர் ஹிந்தியில் சூரரை போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில் அடுத்ததாக ரத்தன் டாடாவின் கதையை திரைப்படமாக்கலாம் என முடிவு செய்துள்ளாராம் சுதா கொங்கரா. ரத்தன் டாடா இந்தியாவின் தொழிலதிபர்களில் மிக முக்கியமானவர் ஆவார். எனவே இவரது கதையை திரைப்படமாக்கும் பட்சத்தில் அது இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் ரத்தன் டாடாவாக நடிகர் அபிஷேக் பச்சன் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
