விஜய், அஜித்துக்கு பிறகு சிவகார்த்திகேயன்..? – டாப் வசூலுக்கு வந்த டான்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் வெளியான படம் டான். இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் கடந்த வாரத்தில் வெளியானது. கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் காமெடி மற்றும் அப்பா செண்டிமெண்ட் காட்சிகளும் ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் டான் நல்ல வசூலை நிகழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் கவனிக்கத்தக்க வசூலை டான் நிகழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிகம் வசூலித்த படமாக முதல் இடத்தில் பீஸ்ட் உள்ளது. மொத்தமாக 1.38 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள அஜித்தின் வலிமை 410K டாலர்களை வசூலித்துள்ளது.

மூன்றாவது இடத்தை பிடித்துள்ள டான் 353K டாலர்களை வசூலித்துள்ளது. வரும் வார இறுதியில் இது மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க மார்க்கெட்டில் விஜய், அஜித்துக்கு நிகரான இடத்தை சிவகார்த்திகேயனும் பிடித்துள்ளார்.

Refresh