தேறுமா இல்லையா? எப்படியிருக்கு மாரீசன் திரைப்படம்..!

இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் நாளை வெளியாகியிருக்கும் திரைப்படம் மாரீசன். இந்த திரைப்படத்தில் பகத் பாசில் மற்றும் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனாலேயே இந்த படத்திற்கு நல்ல வகையில் எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்த படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா? என இப்போது பார்க்கலாம். படத்தின் கதைப்படி பகத் பாசில் ஒரு திருடனாக இருந்து வருகிறார். அவர் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு இடத்தில் வடிவேலு சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறார். அப்போது அவர் பகத் பாசிலிடம் உதவி கேட்கிறார்.

மேலும் தன்னை காப்பாற்றினால் ஒரு தொகை தருவதாகவும் கூறுகிறார் வடிவேலு. இந்த நிலையில் பகத் பாசிலும் அவரை காப்பாற்றுகிறார். பிறகு ஏ.டி.எம் சென்று பணத்தை எடுத்து கொடுக்கிறார் வடிவேலு. அப்போதுதான் அவரது வங்கி கணக்கில் நிறைய பணம் இருப்பதை பார்க்கிறார் பகத் பாசில்.

Social Media Bar

அதை எப்படியாவது எடுத்துவிட பகத் பாசில் திட்டமிடுகிறார். இந்த நிலையில் அதற்காக வடிவேலுவுடன் பயணிக்கிறார் பகத் பாசில். வடிவேலுவிற்கு அல்சைமர் என்கிற நினைவு இழப்பு வியாதி இருந்து வருகிறது. இதனை அடுத்து அவர் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய விஷயங்களை மறக்க துவங்குகிறார்.

இதனை தொடர்ந்து ஒரு கட்டத்திற்கு மேல் வடிவேலுவால் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார் பகத் பாசில். இதற்கு நடுவே பகத் பாசிலுக்கும் வடிவேலுக்கும் இடையே ஒரு நல்ல உறவு ஏற்படுகிறது. இதை தொடர்ந்து கதை எப்படி செல்லும் என்பதே படத்தின் கதையாக இருக்கிறது.

படம் சுறு சுறுப்பான திரைக்கதையை கொண்டுள்ளது. இந்த படத்தின் கதைக்களம் சிறப்பாக இருப்பதால் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.