Hollywood Cinema news
தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான ஃபைனல் டிஸ்டினேஷன் ப்ளட்லைன்… புதுப்படம் ட்ரைலர் ரிலீஸ்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே ஹாலிவுட் திரைப்படங்கள் மீது அதிகமான ஈடுபாடு உண்டு. இணைய வசதி எல்லாம் வருவதற்கு முன்பே டிவிடிகளில் தமிழ் டப்பிங் படங்களை போட்டு பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் ரசிகர்கள்.
அப்போதைய காலக்கட்டம் முதலே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் திரைப்படம்தான் ஃபைனல் டிஸ்டினேஷன். தமிழில் விதியின் விளையாட்டு என்கிற பெயரில் இந்த படத்தின் டிவிடிகள் விற்பனையாகி வந்தது.
பல பாகங்களாக வந்திருந்தாலும் ஃபைனல் டிஸ்டினேஷன் திரைப்படத்தின் கதைகளம் ஒரே மாதிரிதான் இருக்கும். அதாவது ஒரு மாபெரும் விபத்தில் பல உயிர்கள் சாக வேண்டி இருக்கும். அந்த விபத்து ஒரு பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ தெரிந்து அவர்கள் அந்த விபத்தில் இருந்து ஒரு சிலரை மட்டும் காப்பாற்றி விடுவார்கள்.
அந்த தப்பித்த ஒரு சிலர் விதியின்படி செத்திருக்க வேண்டும். ஆனாலும் அவர்கள் சாகாமல் உயிர் பிழைத்து இருப்பதால் விதியே அவர்களது கதையை முடிக்கும். இந்த நிலையில் அவர்களின் மரணம் கொடூரமாக அமைவதை காட்சிப்படுத்தும் வகையில் படத்தின் கதை இருக்கும்.
இந்த நிலையில் அந்த படத்தின் அடுத்த பாகமாக ஃபைனல் டிஸ்டினேஷன் ப்ளட் லைன் என்கிற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரு நபரின் வாரிசுகளுக்கு மட்டும் விதி ஸ்கெட்ச் போட்டு தூக்குவதாக இதன் கதை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதன் ட்ரைலர் தற்சமயம் தமிழில் வெளியாகி உள்ளது. அதில் டாட்டூ போடும் பையன் ஒருவனை ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறது விதி. இந்த படம் வருகிற மே 16 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
