Connect with us

ஊரே படத்தை கொண்டாடுனப்போதும் கூட கஷ்டத்தில் நிற்கும் இயக்குனர்!.. கில்லி இயக்குனர் நிலை இப்ப என்ன தெரியுமா?

vijay director dharani

Latest News

ஊரே படத்தை கொண்டாடுனப்போதும் கூட கஷ்டத்தில் நிற்கும் இயக்குனர்!.. கில்லி இயக்குனர் நிலை இப்ப என்ன தெரியுமா?

cinepettai.com cinepettai.com

விஜய் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த படம் கில்லி. இந்த திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் மீண்டும் படத்தை திரையரங்குகளில் வெளியிட்டனர். ஆனால் மறுவெளியீட்டிலும் கூட ஏதோ புது படம் போல செமையான வசூலை கொடுத்து கொண்டுள்ளது கில்லி திரைப்படம்.

குடும்ப ஆடியன்ஸ் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் திரைப்படமாக கில்லி திரைப்படம் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் தரணி. இவர் 1999 இல் எதிரும் புதிரும் என்கிற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ghilli
ghilli

அந்த திரைப்படம் சிறைந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் இயக்கி தில், தூள் என பெரும்பான்மையான படங்கள் நல்ல வெற்றியையே கொடுத்தன. இறுதியாக 2011 இல் ஒஸ்தி திரைப்படத்தை இயக்கினார் தரணி.

அது அவ்வளவாக பெரும் வெற்றியை கொடுக்கவில்லை. அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இந்த நிலையில் தற்சமயம் இயக்குனர் தரணி கஷ்டத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே கில்லி மறுவெளியீட்டில் வசூலாகும் தொகையில் அவருக்கும் கொஞ்சம் கொடுத்தால் தேவலை என்பது சினி வட்டாரத்தில் உள்ளவர்களது மனநிலையாக உள்ளது.

To Top