News
தளபதி 66 படம் பேரு என்ன தெரியுமா? – ரசிகர்களை கண்டுப்பிடிக்க விட்ட படக்குழு
பீஸ்ட் திரைப்படமானது தளபதி விஜய்க்கு எதிர்ப்பார்த்த வரவேற்பை அளிக்கவில்லை. அதிகமாக எதிர்மறையான விமர்சனங்கள் வந்த காரணத்தால் அடுத்த படமான தளபதி 66 திரைப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகமானது.

தெலுங்கு இயக்குனர் வம்சி இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இதில் விஜய்க்கு கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்கிறார். மேலும் சிறப்பு கதாபாத்திரமாக நடிகர் மகேஷ் பாபுவும் நடிக்கிறார்.
மகேஷ் பாபு, ராஷ்மிகா, வம்சி என இருப்பதால் அதிகப்பட்சம் படம் தெலுங்கு ரசிகர்களை குறி வைத்து எடுக்கப்படுகிறதோ என்கிற பேச்சுக்களும் உள்ளன. இந்நிலையில் தளபதி திரைப்படத்தின் பெயர் குறித்து முக்கியமான அறிவிப்பு வந்துள்ளது.

ஆனால் அதை ரசிகர்களே கண்டுபிடிக்க வேண்டும் என பெயருக்கான சில குறிப்புகளை மட்டும் படக்குழு வழங்கியுள்ளது. படத்தின் பெயர் ஆங்கில எழுத்தில் மொத்தம் 12 எழுத்துக்கள் ஆகும். அதில் படத்தின் பெயர் K என்கிற எழுத்தில் துவங்கி N என்கிற எழுத்தில் முடிகிறது. எனவே ரசிகர்கள் அனைவரும் படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என சிந்தித்து வருகின்றனர்.
