News
புஷ்பா, கைதி ரகம் ! – சந்தானம் நடிக்கும் அடுத்தபடம்
தமிழில் நகைச்சுவை நடிகராக வந்து பிறகு கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் சந்தானம்.
தமிழில் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள சந்தானத்தின் படங்களில் தில்லுக்கு துட்டு, ஏ1 போன்றவை குறிப்பிடத்தகுந்த படங்கள் ஆகும்.
தற்சமயம் சந்தானம் நடித்து வெளிவர இருக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு குலு குலு என பெயரிடப்பட்டுள்ளது.

சாதரணமாகவே சந்தானத்தின் திரைப்படங்கள் அனைத்தும் நகைச்சுவை திரைப்படங்களாக இருப்பதால் இந்த திரைப்படமும் நகைச்சுவை திரைப்படமாகத்தான் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
போஸ்டரில் ஒரு காய்கறி ஏற்றி செல்லும் லாரி கவிழ்ந்து இருக்கிறது. அதற்கு முன்னால் சந்தானம் சீட்டு விளையாடி கொண்டிருக்கிறார். இதை வைத்து பார்க்கும்போது சந்தானம் லாரி ட்ரைவராக இருப்பார் என்றும் லாரி பயணமே கதை கருவாக இருக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பேரிஸ் ஜெயராஜ் திரைப்படத்திற்கு பிறகு வந்த டிக்கிலோனா மற்றும் சபாபதி ஆகிய திரைப்படங்கள் பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யவில்லை என்கிற பேச்சு உள்ளது. எனவே இந்த படம் அதிக நகைச்சுவையுடன் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புஷ்பா, கைதி திரைப்படங்கள் போலவே இதிலும் கதாநாயகன் லாரி ட்ரைவராக இருக்கிறார். எனவே இனி வரும் காலங்களில் கதாநாயகன் லாரி ட்ரைவராக இருப்பது புது ட்ரெண்டாக வர வாய்ப்புள்ளது.
இந்த படத்தை இயக்குனர் ரத்னகுமார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே மாஸ்டர், மேயாத மான் திரைப்படங்களுக்கு ரைட்டராக இருந்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாக உள்ளது.
