கவுண்டமணி இல்லாட்டி எனக்கு காதல் காட்சிகள் வராது? –  சத்யராஜ் சொன்ன ரகசியம்!

நடிகர் சத்யராஜ் சினிமாவிற்கு அறிமுகமானபோது முதலில் வில்லனாகதான் அறிமுகமானார். பிறகு எதிர்பாராத விதமாக கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவே தொடர்ந்து கதாநாயகனாக மாறினார்.

கதாநாயகன், வில்லன் என எதுவாக இருந்தாலும் தனக்கென ஒரு நக்கல் தோணியை கொண்டிருப்பார் நடிகர் சத்யராஜ். அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் அவருடன் நடித்திருப்பார் நடிகர் கவுண்டமணி. 

சத்யராஜ்க்கு இணையாக நக்கல் திறன் கொண்டவர் கவுண்டமணி. எனவே ஒரு படத்தில் கவுண்டமணி சத்யராஜ் இருவரும் இருந்தால் அந்த படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது.

ஆனால் ஆரம்பக்கட்டத்தில் வில்லனாக அறிமுகமானதாலேயே சத்யராஜ்க்கு அவ்வளவாக காதல் காட்சிகளில் நடிக்க வராதாம். பார்த்தால் மக்களே கேலி செய்யும் விதத்தில்தான் காதல் காட்சிகள் இருக்குமாம். எனவே இதற்காக ஒரு ப்ரத்யேக ஐடியாவை வைத்திருந்தாராம் சத்யராஜ்.

சத்யராஜ் அதிகப்பட்சம் காதல் காட்சிகள் வரும்போது அதில் கவுண்டமணியையும் இடம்பெற செய்வாராம். கவுண்டமணி அந்த சமயத்தில் படத்தில் எதாவது நகைச்சுவையாக கலாய்த்து அந்த காட்சியை சமாளித்து விடுவாராம்.

இப்படிதான் அதிக காதல் காட்சிகளில் நடித்தேன் என சத்யராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Refresh