மக்களுக்காக மின் விளக்கு அமைத்து கொடுத்த இசைஞானி!.. என்ன ஒரு மனுசன் பாருங்க!..

தமிழ் மக்கள் மனதில் தனது இசையின் மூலமாக பல வருடங்களாக தீராத தாக்கத்தை ஏற்படுத்தியவர் இசையமைப்பாளர் இளையராஜா. ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட எந்த ஒரு இசையமைப்பாளராலும் போட முடியாத அளவிற்கு படங்களுக்கு பாடல்களை இசையமைத்துள்ளார் இளையராஜா.

இதனால் தமிழ் சினிமாவிலேயே செல்வாக்கு மிகுந்த ஒரு பிரபலமாக இளையராஜா இருக்கிறார். இப்போதும் இளையராஜாவின் இசைக்கு அதே அளவு மதிப்பும் மரியாதையும் இருந்து வருகிறது. தற்சமயம் இளையராஜா அரசியலில் இறங்கியுள்ளார்.

ராஜ்யசபா உறுப்பினராக உள்ள இளையராஜா அரசியல் ரீதியாக சில நன்மைகளையும் செய்து வருகிறார். இளையராஜா குறித்து வெகு வருடங்களாக ஒரு புரளி இருந்து வந்தது. அதாவது அவர் யாருக்குமே நல்லது செய்ய மாட்டார் இளையராஜாவை பார்க்க வருபவர்களுக்கு கூட அவர் உதவ மாட்டார் என்று ஒரு பேச்சு இருந்தது.

அதை உடைக்கும் விதமாக தற்சமயம் ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் 16 மீட்டர் உயர கோபுர மின்விளக்கு ஒன்றை கூடலூர் நகராட்சியில் அமைத்து கொடுத்துள்ளார் இசைஞானி இளையராஜா. அந்த புகைப்படம் தற்சமயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.