பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே அறிவிக்கப்படாத போர் ஒன்று துவங்கியுள்ளது. இந்த போர் பதற்ற நிலையில் தொடர்ந்து இரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆப்பரேஷன் சிந்தூர் என்கிற திட்டத்தை அமல்ப்படுத்தியது இந்தியா. அதன்படி பாகிஸ்தான் பகுதிகளில் பயங்கரவாதிகளின் பகுதிகளில் இந்தியா தனது தாக்குதலை துவங்கியது.
நாட்டின் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை ஒரு நாடு மற்றொரு நாட்டின் வான்வெளி எல்லைக்குள் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் தாக்குதல் நடத்திவிட்டாலே அது போருக்கான ஆரம்பமாகவே கருதப்படும். அந்த வகையில் பாகிஸ்தானும் எதிர்தாக்குதலை துவங்கியது.
பஞ்சாப் மற்றும் காஷ்மீரை தாக்கும் விதத்தில் ஏவுகணைகளை அனுப்பியது பாகிஸ்தான். ஆனால் ரேடார்களின் உதவியுடன் அவற்றை வானிலேயே செயலிழக்க செய்தது இந்தியா.
இதற்கு பதிலடியாக இந்தியா ட்ரோன் மூலம் அடுத்த தாக்குதலை நடத்தியது. இதில் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்திய கடற்படையின் போர் கப்பலான INS vikrant கப்பலானது போர் சூழல் காரணமாக அரபி கடலில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. அது தற்சமயம் கராச்சி துறைமுகத்தில் தாக்குதலை நடத்தியுள்ளது.
அதனால் பீதியுடன் மக்கள் ஓடும் வீடியோக்கள் இப்போது பரவி வருகின்றன.