நருட்டோ கதையில் மிக முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும் கதாபாத்திரம்தான் இட்டாச்சி உச்சிஹா. ஆரம்பத்தில் இட்டாச்சி கதாபாத்திரம் மிகவும் மோசமான ஒரு கதாபாத்திரமாகவே சித்தரிக்கப்படுகிறது. இதனால் இட்டாச்சியின் சொந்த தம்பியான சாசுக்கே உச்சிஹா கூட தனது அண்ணனை கொலை செய்வதை வாழ்நாள் கனவாக கொண்டிருக்கிறான்.
ஆனால் காலங்கள் செல்ல செல்லதான் இட்டாச்சி எவ்வளவு நல்லவன் என்பது தெரிகிறது. நருட்டோவை பிடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தாலும் கூட இட்டாச்சி அவனை பிடிக்காமல் விட்டுவிடுவான்.
நருட்டோ ஷிப்புடனை முழுதாக பார்த்தவர்களுக்கு இட்டாச்சி ஏன் உச்சிஹா வம்சத்தையே அழித்தான் என தெரியும். ஆனால் அதற்கு பிறகாவது அவன் நல்லவனாக இருந்திருக்கலாம். எதற்காக அவன் அகாட்சுகியில் சேர வேண்டும் என சிலர் கேட்கலாம்.
இட்டாச்சியை பொறுத்தவரை அவன் கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடிய ஒருவனாகவே இருந்துள்ளான். அதனால்தான் ஹிடன் லீஃப் வில்லேஜ்க்காக தனது வம்சத்தையே அவன் அழிக்கிறான். அப்படி அழிக்கும்போது அவனுக்கு ஓபிட்டோ உதவுவான்.
அதற்கு கை மாறாக அகாட்சுகியில் இட்டாச்சி சேர வேண்டும் என அவன் கோரிக்கை வைத்திருப்பான். அதற்கு இட்டாச்சியும் ஒப்புக்கொள்வான். அதனால்தான் தனது க்ளான் நபர்களை கொன்ற பிறகு இட்டாச்சி ஹிருசென் ஹொக்காகேவிடம் இந்த விவரங்களை கூறுவான்.
ஆனாலும் கூட தனது தம்பி சாசுக்கேவுக்கு எந்த ஆபத்தும் வர கூடாது என ஹிருசென்னிடம் கேட்டுக்கொண்டுதான் இட்டாச்சி செல்வதாக கதை அமைந்திருக்கும்.