போர் நடக்கும்போது அது வேண்டாம்.. தக் லைஃப் குறித்து முக்கிய முடிவெடுத்த கமல்ஹாசன்..!

எல்லா காலங்களிலுமே சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக கமல்ஹாசனின் திரைப்படங்கள் இருந்து வந்துள்ளன. ஒரே மாதிரி ஆக்‌ஷன் திரைப்படங்களாக நடிக்காமல் ஒவ்வொரு முறையும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமாக ஏதாவது ஒன்றை முயற்சி செய்துக்கொண்டே இருப்பார் கமல்ஹாசன்.

அந்த வகையில் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நாயகனாக இருக்கிறார். கமல்ஹாசன் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த நாயகன் திரைப்படம் வெளிவந்தப்போது பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அதற்கு பிறகு அது அதிக வரவேற்பை பெற்றது.

இப்போது வரை சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுக்கு பிடித்த படமாக நாயகன் திரைப்படத்தை கூறுவதை பார்க்க முடியும். இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து மீண்டும் கமல்ஹாசனும் மணிரத்தினமும் காம்போ போட்டு நடிக்கும் திரைப்படம் தக் லைஃப்.

Thug-life
Thug-life

இந்த படத்தை திரையரங்கில்தான் பார்க்க வேண்டும் என இப்போதே ஒரு குழு முடிவுடன் இருக்கிறது. இந்த நிலையில் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை இந்த மே மாதம் பெரிதாக நடத்த திட்டமிட்டது படக்குழு.

ஆனால் தற்சமயம் போர் சூழல் நிலவி வருகிறது. எனவே இப்போது இந்த விழாவை நடத்த வேண்டாம் என கூறிவிட்டார் கமல்ஹாசன். மேலும் போர் பதற்றங்கள் முடிந்த பிறகே தக் லைஃப் வெளியாகும் என தகவல் வெளியாகி வருகிறது.

இதே போல மற்ற திரைப்படங்கள் தாமதமாக படங்களை வெளியிட வாய்ப்புள்ளது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version