இனி டிக்கெட் விலை அதிகமாகும்.. அரசு அறிமுகப்படுத்திய புதிய வரி..!

திரையரங்குகளில் டிக்கெட் விலை என்பது அதிகமாகி கொண்டே செல்கிறது. இதனாலேயே தொடர்ந்து திரையரங்குகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை என்பது குறைந்து வருகிறது. ஆனால் இன்னமுமே பல திரையரங்குகள் டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இசை கச்சேரிகள் போன்றவற்றை இசையமைப்பாளர்களும் பாடகர்களும் அடிக்கடி நடத்தி வருகின்றனர். இதில் அவர்களுக்கு ஒரு வருமானமும் கிடைக்கிறது. ஆனால் அதற்கான டிக்கெட் விலை எப்போதும் அதிகமாகதான் இருக்கிறது.

 

குறைந்தப்பட்சம் 2000 முதல் 15000 வரை இதற்கான டிக்கெட் விலைகள் இருக்கின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு இந்த டிக்கெட்களுக்கு 10 சதவீதம் வரி விதித்துள்ளது. இதனால் மேலும் இந்த டிக்கெட் விலைகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இதே போன்ற வரியை திரையரங்குகளுக்கு விதித்தால் அதுவுமே திரையரங்க டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version