இணையத்தை கதறவிட்ட தாத்தா… கலாய்க்கு உள்ளாகும் இந்தியன் 2!..

தமிழ் சினிமாவில் சில படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் எப்பொழுதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். காரணம் அந்த படத்தை முன்னணி நடிகர் நடித்து படம் மாபெரும் வெற்றி பெற்று இருக்கும். மேலும் முதல் பாகம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகமும் எடுக்கப்படுவது என்பது சினிமாவில் வழக்கமான ஒன்றுதான்.

மேலும் அவ்வாறு உரவாக்கப்படும் இரண்டாம் பாகமானது ரசிகர்களின் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். முதல் பாகத்தை விட, இரண்டாவது பாகம் இன்னும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என படத்தை மிக கவனமாக உருவாக்குவார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வெளிவந்து அதில் இரண்டாம் பாகமும் வெளியிடப்பட்டிருக்கும். இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் ரசிகர்களின் மத்தியில் ட்ரோலுக்கு உள்ளானது. அது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரம்மாண்ட இயக்குனரின் இந்தியன் 2 படம்

இந்தியன் திரைப்படம் 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் மனுஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ஆகும்.

இந்தத் திரைப்படம் அப்போது வெளிவந்த பாட்ஷா படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இரட்டை வேடத்தில் நடித்திருந்த கமல்ஹாசன் இந்த படத்தில் தன்னுடைய நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். மேலும் இந்த படம் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் படமாகும்.

ஆஸ்கார் விருதிற்காக 1996 ஆம் ஆண்டு இத்திரைப்படம் இந்தியா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். இவ்வாறு வெற்றி படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்தியன் படம் அனைவரின் எதிர்பார்ப்பில் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படம் எடுக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. ஆனால் இந்தியன் 2 படத்தை பார்த்த பலரும் அதனை கலாய்தார்கள். மேலும் அந்த படம் பல சர்ச்சைக்கு உள்ளானது.

இந்தியன் தாத்தாவை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்

இந்தியன் 2 திரைப்படம் 3 மணிநோரத்திற்கும் அதிகமாக பல தேவையில்லா காட்சிகள் என அனைத்து வைத்து ரசிகர்களின் மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்தது. மேலும் மீண்டும் இந்தியன் தாத்தாவாக வந்த கமல்ஹாசனை யாரும் கொண்டாடவில்லை. இந்நிலையில் இந்தியன் திரைப்படம் netflixல் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இதுதான் சரியான நேரம் என இந்தியன் 2 படத்தை மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளி விட்டார்கள் நெட்டிசன்கள்.

அனைவராலும் ரசிக்கப்பட்ட இந்தியன் தாத்தா என்று கூட பார்க்காமல், பல மீம்ஸ்கள் போட்டு படத்தை ட்ரோல் செய்து விட்டார்கள். இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.