Hollywood Cinema news
ஒரு ஆபிஸ் பாய் ஃபீல்ட் ஏஜெண்டாகும் கதை! – தமிழ் டப்பிங்கில் வந்த ஜாக் ரியான் சீரிஸ்!..
ஹாலிவுட்டில் சி.ஐ.ஏ சீரிஸ்களுக்கும், படங்களுக்கும் பஞ்சமே இருந்ததில்லை. உலகிலேயே சி.ஐ.ஏ பெரும் அமைப்பாக இருக்கிறதோ இல்லையோ ஹாலிவுட் திரைப்படங்களில் அதற்கான பில்டப்புகள் மட்டும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
அப்படி ஹாலிவுட்டில் ஏற்கனவே படமாக வந்து நல்ல ஹிட் கொடுத்த கதைதான் ஜாக் ரியான். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அமேசான் ப்ரைம் அதை தொடராக்கி உள்ளது. தமிழ் மக்கள் ஜாக்கிச்சான் காலம் முதலே ஹாலிவுட் மீது பெரும் ஆர்வம் கொண்டவர்களாயிற்றே.
அதனால் இந்த சீரிஸ் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வந்துள்ளது. யார் இந்த ஜாக் ரியான். சி.ஐ.ஏ அலுவலகத்தில் கம்ப்யூட்டரில் பணிப்புரியும் ஒரு சாதரண ஆள்தான் ஜாக் ரியான். ஆனால் அவனுக்கு அதிக புத்திக்கூர்மை உண்டு. அதைக்கொண்டு சி.ஐ.ஏவில் இருக்கும் ஃபீல்டு ஏஜெண்டுகளால் முடியாததை கூட ஜாக் ரியான் கண்டுப்பிடிக்கிறான்.
இதனால் போக போக பதவி உயர்வு கிடைத்து ஃபீல்டு ஏஜெண்டாக மாறுகிறான் ஜாக் ரியான். தற்சமயம் அதன் மூன்றாவது சீசன் வந்துள்ளது. மூன்றாவது சீசனை பொறுத்தவரை சோக்கால் என அழைக்கப்படும் ஒரு ஆயுதத்தை வைத்து படக்கதை செல்கிறது.
பொதுவாக சி.ஐ.ஏ என்றாலே அவர்களுக்கு வில்லனாக ரஷ்யாக்காரர்கள்தான் இருப்பார்கள். ரஷ்யா சோக்கால் எனும் புது ரக ஏவுகணையை தயாரிக்கிறது. இந்த ஏவுகணையை ரேடாரால் கூட கண்டறிய முடியாது. அதை கொண்டு ஒரு உலக யுத்தத்தையே நிகழ்த்த திட்டமிடுகிறது ரஷ்யாவை சேர்ந்த ஒரு அமைப்பு.
ஆரம்பம் முதலே அதை சரியாக மோப்பம் பிடிக்கும் கதாநாயகன் அதை தடுக்க மேற்க்கொள்ளும் முயற்சிகளே மொத்த கதையாக உள்ளது. இந்த சீரிஸிற்கு அதிக வரவேற்புகள் உண்டாகி வருகின்றன.