மீண்டும் பகீர் கிளப்பும் ஃபேமிலிமேன் சீசன் 3! – நடிக்க போவது யார் தெரியுமா?

இந்தியில் வெளியாகி பிரபலமான வெப் சிரிஸ்களில் முக்கியமான வெப் சிரிஸ் ஃபேமிலி மேன்.

இதன் முதல் சீசன் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த ஆண்டில் சீசன் 2 வெளியானது. விடுதலை புலிகள் அமைப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த இரண்டாவது சீசனில் இலங்கை போராளியாக சமந்தா நடித்திருந்தார்.

Familyman 2

அவரது நடிப்பிற்காக அவருக்கு வாழ்த்துகள் கிடைத்த அதேசமயம் புலிகள் அமைப்பை கொச்சை படுத்தும் விதமாக படம் உள்ளதாக பல்வேறு விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய ஃபேமிலிமேன் சிரிஸின் மூன்றாவது சீசன் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்திலேயே இதற்கான காட்சிகள் காட்டப்பட்டிருக்கும்.

Familyman

அதன்படி சீன ஆக்கிரமிப்பு, கொரோனா பரவல் உள்ளிட்டவற்றை மையமாக கொண்டு இந்த மூன்றாவது சீசன் இருக்கும் என கூறப்படுகிறது. வழக்கம்போல மனோஜ் பாஜ்பாய். பிரியாமணி உள்ளிட்டவர்கள் நடித்திருப்பார்கள் என்றாலும் கிழக்கு இந்திய பிராந்தியங்களை மையப்படுத்திய கதை என்பதால் வங்க மொழியில் பிரபலமான நடிகர்கள் நடித்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Refresh