டைரக்‌ஷன் பண்ணி நாளாச்சு… களமிறங்கிய சசிக்குமார்! – அந்த நாவல்தான் கதையாம்!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் பிரபலமாக உள்ளவர் சசிக்குமார்.

Sasikumar

சுப்ரமணியபுரம், ஈசன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சசிக்குமார் பின்னர் சில படங்களிலும் நடிக்க தொடங்கினார். அவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்ததால் நீண்ட காலமாக இயக்குனர் பணியை விட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் இயக்குனராக களம் இறங்குகிறார் சசிக்குமார். ஆனால் படத்தை இயக்காமல் ஒரு இணைய தொடரை இயக்க உள்ளார். வேலராமமூர்த்தி எழுதிய “குற்ற பரம்பரை” நாவலை தழுவி இந்த வெப் சிரிஸ் உருவாக்கப்பட உள்ளது.

இந்த சிரிஸில் நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Refresh