News
காசுக்காக என்ன வேணாலும் செய்யலாமா? – அலியா பட்டை கழுவி ஊற்றிய ரசிகர்கள்!
இந்தி சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக இருந்து வருபவர் ஆல்யா பட்.
இந்தியில் ஸ்டூடண்ட் ஆப் தி இயர், 2 ஸ்டேட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான இவர் சமீபத்தில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்ததன் மூலமாக தென்னிந்தியா சினிமாவிலும் பிரபலமாகியுள்ளார்.

நீண்ட காலமாக ரன்பீர் கபூரை காதலித்து வந்த அலியா பட் சமீபத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் விளம்பர படங்கள் பலவற்றிலும் அலியா பட் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு குளிர்பான நிறுவன விளம்பரத்தில் “சர்க்கரை உடலுக்கு நல்லது” என்று கூறி நடித்துள்ளார். ஆனால் இவரே சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் தான் சர்க்கரை எடுத்துக் கொள்வதே இல்லை என்றும், அது உடலுக்கு கேடு என்றும் பேசியுள்ளார்.
இதுகுறித்து கேள்வியெழுப்பியுள்ள ரசிகர்கள் “காசு குடுத்துட்டா மனசாட்சியே இல்லாம நடிப்பீங்களா?” என்று சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.
