News
நல்ல போலீசாக களம் இறங்கிய எஸ்.ஜே சூர்யா? – வெளிவர இருக்கும் புது சீரிஸ்
மாநாடு திரைப்படம் வெளியானது முதல் சிம்புவை போலவே நடிகர் எஸ்.ஜே சூர்யாவின் புகழும் உயர்ந்துள்ளது. மாநாடு திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யாவின் கதாபாத்திரத்தை பலரும் வெகுவாக ரசித்தனர்.
இதனால் பலர் எஸ்.ஜே சூர்யாவிற்கு ரசிகராகிவிட்டனர். அதன் பிறகு டான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த நிலையில் தற்சமயம் தமிழில் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். இந்த சீரிஸ் இந்திய அளவில் அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.
தமிழ்,ஹிந்தி,மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த சீரிஸ் வெளியாக இருக்கிறது. வதந்தி என இந்த சீரிஸ்க்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சீரியஸான போலீஸ் ஆபிசராக எஸ்.ஜே சூர்யா இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூழல் சீரிஸை தயாரித்த புஷ்கர் காயத்ரிதான் இந்த சீரிஸையும் தயாரித்துள்ளனர். கொலைகாரன் திரைப்படத்தின் இயக்குனர் ஆண்ட்ரோ லூயிஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

கொலைகாரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதால் இந்த தொடரும் கூட நல்ல வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த தொடர் வருகிற டிசம்பர் 2 அன்று அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.
