60 வயதை கடந்த பிறகும் கூட ஜாக்கிச்சான் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். ஹாலிவுட் நடிகர் என்பதையும் தாண்டி ஜாக்கிச்சான் தமிழ் மக்கள் மனதை கவர்ந்த ஒரு நடிகராவார். அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் பார்த்துள்ளனர்.
அப்படியாக அவரது நடிப்பில் பெரிதாக காமெடி காட்சிகள் இல்லாமல் வந்த திரைப்படம்தான் கராத்தே கிட். இந்த திரைப்படத்தில் நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். இந்த படம் நல்ல அளவிலான வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் அதனை தொடர்ந்து அதே கதை அம்சத்தில் கராத்தே கிட் லெஜண்ட்ஸ் என்கிற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் கதை கிட்டத்தட்ட கராத்தே கிட் திரைப்படத்தின் கதையோடு ஒத்து போகிறது. இந்த படத்திலும் நாயகன் அமெரிக்காவுக்கு புதிதாக வருகிறான்.
ஒரு பெண்ணோடு பழக்கம் ஏற்படுகிறது. அந்த பெண்ணின் நண்பனாக இருப்பவன் பிரச்சனை செய்கிறான். இந்த நிலையில் ஜாக்கிச்சான் இந்த பையனுக்கு பயிற்சி கொடுக்கிறார். ஆனால் சண்டை காட்சிகளில் மிரட்டி இருக்கிறது இந்த திரைப்படம்.
இதனையடுத்து இந்த படம் குறித்து அதிக எதிர்பார்ப்புகள் உருவாகி வருகின்றன.