தற்சமயம் ரவி மோகன் என பெயரை மாற்றி இருந்தாலும் அனைவராலும் ஜெயம் ரவி என்றே இன்னும் அடையாளம் காணப்பட்டு வருகிறார் ஜெயம் ரவி. சமீப காலங்களாகவே ஜெயம் ரவி தேர்ந்தெடுத்த கதைகளங்கள் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை.
இறைவன், அகிலன் என அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் அவருக்கு தோல்வியைதான் ஏற்படுத்தி கொடுத்தன. இதனை தொடர்ந்து அவருக்கு மார்கெட் என்பது குறைய துவங்கியது. இந்த நிலையில் குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சனையை சந்தித்தார் ஜெயம் ரவி.
தற்சமயம் இவர் கதை தேர்ந்தெடுப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் ஜெயம் ரவி. இது பலருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஏனெனில் ஜெயம் ரவி தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வந்த நடிகராவார். திடீரென ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார். இத்தனைக்கும் சிவகார்த்திகேயன் ஜெயம் ரவிக்கு பிறகு சினிமாவிற்கு வந்தவர் என பலரும் பேசி வந்தனர்.
இந்த நிலையில் அடுத்து லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் திரைப்படத்திலும் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம் ஜெயம் ரவி. அவருக்கு அதிக பண கஷ்டம் இருப்பதாகவும் அதனால்தான் வில்லனாக வரும் வாய்ப்பை கூட ஏற்றுக்கொண்டு நடிக்கிறார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.