Connect with us

இந்த படமாவது கை கொடுக்குமா? பிரதர் திரைப்படம்.. முதல் நாள் வசூல் நிலவரம்.!

brother

Tamil Cinema News

இந்த படமாவது கை கொடுக்குமா? பிரதர் திரைப்படம்.. முதல் நாள் வசூல் நிலவரம்.!

கோமாளி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகும் காமெடி திரைப்படமாக பிரதர் திரைப்படம் இருக்கிறது. தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்று அக்டோபர் 31ஆம் தேதி பிரதர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியிருக்கிறார். இயக்குனர் ராஜேஷை பொருத்தவரை தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவராக ராஜேஷ் இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், நடராஜன், பூமிகா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

பிரதர் வசூல் நிலவரம்:

வெகு காலங்களாகவே ஜெயம் ரவி தொடர்ந்து சீரியசான திரைப்படங்களில் நடித்து வந்ததால் இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று வெளியான பிரதர் திரைப்படம் வசூல் ரீதியாக டீசண்டான வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

பிரதர் திரைப்படம் ஒரு கோடியே 50 லட்சம் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. இதற்கு முன்பு வெளியான இறைவன், அகிலன், சைரன் மாதிரியான திரைப்படங்களுடன் ஒப்பிடும் பொழுது முதல் நாள் வசூலை பொருத்தவரை இந்த திரைப்படம் பரவாயில்லை என்பது சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களின் கருத்தாக இருக்கிறது.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

shruthika
biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
To Top