மனைவி மீது போலீஸ் புகார். மாமியாருக்கு எதிராக ஆப்பு வைத்த ஜெயம் ரவி..!
ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இவர்கள் இருவருக்கும் இடையேயான விவாகரத்து குறித்த விஷயங்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.
ஜெயம் ரவியும் ஆர்த்தியும் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டனர் என்றாலும் கூட அவர்களுக்குள் இப்போது ஒத்துவரவில்லை என்று கூறப்படுகிறது.
18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் தற்சமயம் விவாகரத்து செய்வதற்கு முடிவெடுத்து இருக்கின்றனர் இந்த ஜோடிகள். இந்த நிலையில் ஜெயம் ரவி விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார்.
விவாகரத்து பிரச்சனைகள்
அதற்கு பதில் அளித்த ஆர்த்தி இந்த விவாகரத்து குறித்து தன்னிடம் எந்த ஒரு தகவலையும் ஜெயம் ரவி கூறவில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ஜெயம் ரவி அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்.
இதற்கு நடுவே ஜெயம் ரவியின் மாமியார் அவரின் பாஸ்போர்ட் போன்ற விஷயங்களை வீட்டிலேயே எடுத்து வைத்துக் கொண்டு தர முடியாது என்று மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் வெளிநாடு போக முடியாமல் இருந்து வருகிறார் ஜெயம் ரவி இந்த நிலையில் கோபமான ஜெயம் ரவி போலீசில் இது குறித்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார். தனது வீட்டில் இருக்கும் கார் சாவி பாஸ்போர்ட் பண்ற விஷயங்களை தனக்கு மீட்டு தர வேண்டும் என்று போலீசாரிடம் அவர் கேட்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த விஷயம் அதிக சூடு பிடிக்க துவங்கி இருக்கிறது.