News
சர்தார்ல சொன்ன மாதிரி ஒரு ஜீன்ஸ் தயாரிக்க பல லிட்டர் தண்ணீர் செலவாகுது – ஒப்புக்கொண்ட ஜீன்ஸ் நிறுவனம்
சர்தார் படம் வெளியாகி ஐந்தே நாளில் 50 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.
தண்ணீருக்காகதான் மூன்றாவது உலக போர் நடக்கும் என்ற ஒரு கருத்து பலரிடமும் இருந்து வருகிறது. மனித சமுதாயம் உருவான காலம் முதல் அது ஒரே குடையின் கீழ் வாழவும், விவசாயம் செய்யவும் நீர் இன்றியமையாததாக இருந்துள்ளது.

அந்த நீரை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் கைப்பற்றும்போது மனித வாழ்க்கை என்னவாக இருக்கும் என்பதை விளக்கும் வகையில் சர்தார் படம் இருப்பதாக கூறப்படுகிறது.
சர்தார் படத்தின் இயக்குனர் பி.எஸ் மித்ரன் பேட்டி ஒன்றில் கூறும்போது ஜீன்ஸ் பேண்டில் துவங்கி நாம் பயன்படுத்தும் பல பொருட்களை உருவாக்க பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் செலவாகிறது என கூறியுள்ளார். இது பொய் என ஒரு சாரார் கூறி வந்தனர்.
டெர்பி ஜீன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான விஜய் கபூரும் இந்த கருத்துக்கு ஒத்து போகிறார். தற்சமயம் அவரது நிறுவனத்தில் தண்ணீரே பயன்படுத்தாமல் ஜீன்ஸ் தயாரிக்கும் முறையை கண்டறிந்துள்ளதாக கூறியுள்ளார். அப்படி தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ் உடையை தீபாவளிக்கு விற்பனை செய்துள்ளார்.
