என்னய்யா இப்படியே சுத்திட்டு இருக்க!. வா வந்து கமலை வச்சி படம் எடு!. உதவி இயக்குனருக்கு பாலச்சந்தர் வாங்கி கொடுத்த வாய்ப்பு!.

தமிழ் சினிமாவில் பல புதிய முகங்களை அறிமுகம் செய்த இயக்குனர்களில் இயக்குனர் கே.பாலச்சந்தர் முக்கியமானவர். தமிழ் சினிமாவிற்கு நடிகர் ரஜினிகாந்தையே இவர்தான் அறிமுகம் செய்து வைத்தார். ஒருவருக்கு திறமை இருக்கிறது என தெரிந்தால் அவர்களை சுய முயற்சியில் சினிமாவிற்குள் கொண்டு வந்துவிடுவார் பாலச்சந்தர்.

உதாரணத்திற்கு ரஜினிகாந்தை முதன் முதலாக கர்நாடகாவில் உள்ள நடிப்பு பயிற்சி பள்ளியில்தான் சந்தித்தார் கே.பாலச்சந்தர். முதல்முறை அவரை பார்த்தப்போதே அவர் சிறப்பான நடிகராக வருவார் என நினைத்தார் பாலச்சந்தர்.

எனவே நீ கர்நாடகாவில் இருக்க வேண்டாம். சென்னைக்கு வா தமிழ் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என அவரை தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்தார். கன்னட சினிமாவில் கூட இப்படியான ஒரு உயரத்தை அவர் தொட்டிருப்பாரா என்பது சந்தேகமே.

balachandar

அதே போல கே.பாலச்சந்தர் வளர்த்துவிட்ட இன்னொரு நபர்தான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தமிழில் பாட்ஷா, அண்ணாமலை மாதிரி நிறைய வெற்றி படங்களை இயக்கி இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் கே.பாலச்சந்தரிடம்தான் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக படம் இயக்க கற்றுக்கொண்ட அவர் புன்னகை மன்னன் திரைப்படம் படம் பிடிக்கப்பட்ட போது அந்த படத்தின் பல காட்சிகளையே தனியாக இயக்கினார். இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த கே. பாலச்சந்தர் முழுதாக படம் இயக்க கற்றுக்கொண்டாய் பிறகு ஏன் தனியாக சென்று படம் இயக்காமல் இருக்கிறாய் என கேட்டுள்ளார்.

suresh-krishna

அதற்கு பதிலளித்த சுரேஷ் கிருஷ்ணா நீங்கள் அனுமதி தராமல் எப்படி படம் பண்ண முடியும். அதனால்தான் காத்துக்கொண்டுள்ளேன் என கூறியுள்ளார். உடனே பாலச்சந்தர் தன்னுடைய தயாரிப்பிலேயே படம் இயக்குவதற்கு  சுரேஷ் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பளித்தார்.

அப்படி சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய திரைப்படம்தான் சத்யா. அந்த படம் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.