Connect with us

கேப்டன் மண்டபத்தை இடிப்பதற்காக கலைஞர் செய்த வேலை? பொறாமைதான் காரணமா?

kalainger Vijayakanth

Cinema History

கேப்டன் மண்டபத்தை இடிப்பதற்காக கலைஞர் செய்த வேலை? பொறாமைதான் காரணமா?

கேப்டன் மண்டபத்தை இடிப்பதற்காக கலைஞர் செய்த வேலை? பொறாமைதான் காரணமா?

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில் கம்பீரமான நடிகராகவும், வள்ளலாகவும் அறியப்படுபவர் கேப்டன் விஜயகாந்த். பின்னர் தேமுதிக கட்சியை தொடங்கிய விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் நுழைந்த அரசியல் தருணங்களும் நடந்தேறியது. ஆனால் அவர் அரசியலுக்குள் நுழைந்தபோது சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். அதில் ஒன்றுதான் கேப்டன் விஜயகாந்த் மண்டபம் இடிக்கப்பட்ட சம்பவம்.

சென்னை கோயம்பேடு அருகே அமைந்திருந்த அந்த மண்டபம் வெறும் திருமண மண்டபம் மட்டும் அல்ல. பசி என்று வருபவர்களுக்கு விஜயகாந்த் செலவில் அங்கு அன்னதானமே நடத்தப்பட்டு வந்தது. கட்சி தொடங்கும் முன்னர் தேமுதிகவை இயக்கமாக கொண்டு விஜயகாந்த் செயல்பட்டு வந்தார்.

அந்த சமயத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டு திருமணத்திற்கு விஜயகாந்த் சென்றுள்ளார். அதே திருமணத்திற்கு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியும் சென்றுள்ளார். கருணாநிதி திருமணம் நடைபெறும் மண்டபத்தில் விஐபி சேரில் அமர்ந்திருக்கிறார். அப்போது கேப்டன் வருகிறார் என்ற குரல் கேட்கவும் அங்கு இருந்த மொத்த சனமும் விஜயகாந்தை காண ஆவலுடன் வெளியே ஓடிக் கூடியுள்ளனர்.

விஜயகாந்துக்கு கிடைத்த இந்த வரவேற்பும், அரசியலில் அவர் நுழைய இருப்பதும் கலைஞர் கருணாநிதியை கலக்கத்தில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் கோயம்பேடு மேம்பாலம் கட்டும் சமயத்தில் அங்கு பாலம் கட்டும் வேலைக்காக விஜயகாந்த் திருமண மண்டபத்தை இடிக்க வேண்டும் என அதிகாரிகள் பேசினர். இதுகுறித்து விஜயகாந்த் நேரடியாக கலைஞர் கருணாநிதியை சந்தித்து மண்டபம் பலரும் பசியாறும் இடமாக இருக்கிறது. அதை இடிக்காமல் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டாராம்.

ஆனால் கலைஞர் கருணாநிதி தன் கையில் ஒன்றும் இல்லை என்றும், இது மத்திய அரசு செய்யும் பணி என்றும் சொல்லி கைவிரித்து விட்டாராம். பலர் பசியாறிய அந்த மண்டபம் பாலப் பணிகளுக்காக இடிக்கப்பட்டாலும், அந்த பாலம் அதிகம் பயன்படுத்தப்படாமலே இருந்து வருகிறது. இதனால் விஜயகாந்த் மண்டபத்தை இடிப்பதற்காகவே அந்த பாலம் கட்டப்பட்டதா என்ற விமர்சனங்களும் இன்றளவும் இருந்தே வருகின்றது.

To Top