Connect with us

கே.ஜி.எஃப் இயக்குனருடன் ஒன்றிணைகிறாரா உலக நாயகன் ! – வியப்பில் ரசிகர்கள் !

News

கே.ஜி.எஃப் இயக்குனருடன் ஒன்றிணைகிறாரா உலக நாயகன் ! – வியப்பில் ரசிகர்கள் !

Social Media Bar


கே.ஜி.எஃப் என்கிற ஒற்றை திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். எனவே அவர் இயக்குகிற படத்திற்கு மக்களிடையே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. பிரசாந்த் நீலின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க துவங்கி விட்டனர்.

Vikram Poster


தற்சமயம் பாகுபலி பிரபாஸை வைத்து சலார் என்கிற திரைப்படத்தை இவர் இயக்கி வருகிறார். இந்த படம் கே.ஜி.எஃப் 3 படத்தோடு தொடர்புடையதாக இருக்கலாம் என ரசிகர்களிடையே பேச்சுக்கள் உள்ளன. ஏனெனில் கே.ஜி.எஃப் 3 திரைப்படத்தில் பிரபாஸ் இருப்பதாக கே.ஜி.எஃப் படக்குழு அறிவித்துள்ளது.


இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஜூனியர் என்.டி.ஆர் பிறந்த நாள் அன்று அவரது 31 வது படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே ஒருவேளை கே.ஜி.எஃப் க்கும் இந்த படத்திற்கும் கூட தொடர்பு இருக்குமோ என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.


தற்சமயம் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் அந்த படத்தில் கமலஹாசன் அவர்களும் நடிக்க உள்ளதாக பேச்சுக்கள் உள்ளன. பிரசாந்த் நீல் படத்தில் கமல் நடித்தால் அது நல்ல காம்போவாக இருக்கும் என கமல் ரசிகர்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த செய்தி உண்மை என்பதற்கு இன்னும் அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

Bigg Boss Update

To Top