விஜய் ஒரு நல்ல படமாவது நடிச்சா தேவலாம் – அதிர்ச்சி தகவல் அளித்த கமல்

தற்சமயம் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் பட்டையை கிளப்பி நல்ல வசூல் சாதனையை அளித்துள்ளது. ஆனாலும் கட்சி தொடர்பான விஷயங்கள் காரணமாக தொடர்ந்து தன்னால் அதிக படங்கள் நடிகக் முடியாது என கமல் கூறி வருகிறார்.

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை ஒரு முக்கியமான நடிகராக கமலஹாசன் இருக்கிறார். தமிழில் சில கதாநாயகர்கள் மட்டுமே அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் நடிப்பவர்களாக உள்ளனர். மனநிலை பாதிக்கப்பட்டவராக, மாற்று திறனாளியாக, பிச்சைக்காரனாக என எந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்க கூடியவர்களாக இந்த நடிகர்கள் இருப்பார்கள். கமல்ஹாசனும் அப்படிப்பட்ட ஒரு நடிகராகத்தான் இருக்கிறார். 

தமிழில் மாற்று கதைகள் பலவற்றை கொண்டு வந்தவராக கமல்ஹாசன் இருப்பதால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடுத்த நிலையில் கமல்ஹாசன்தான் இருக்கிறார். இவர் முன்னர் ஒரு பேட்டியில் நடிகர்களை பற்றி பேசும்போது அவரிடம் நடிகர் விஜய் திரைப்படங்களில் எந்த திரைப்படத்தை நல்ல திரைப்படம் என நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டது.

அப்போது கமல் “விஜய் நல்ல படம் நடிக்க வேண்டும் என நான் மிகவும் ஆசைப்படுகிறேன்” என கூறியுள்ளார். 

“அப்படியானால் விஜய் நல்ல படமே நடிக்கவில்லை என கூறுகிறீர்களா?” என நிபுணர் கேட்கிறார். அதற்கு கமல் “அனைத்து பெரிய கதாநாயகர்களுமே சிறப்பான நல்ல கதையை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். அப்படி அவர்கள் நல்ல கதைகளாக நடிக்கும்போது நான் கண்டிப்பாக அதற்காக மகிழ்ச்சியடைவேன் எனக் கூறியுள்ளார் கமல்ஹாசன்.”

கமல் வித்தியாசமான கதைகளங்கள் கொண்ட திரைப்படங்களைதான் நல்ல படம் என கூறுகிறாரா? என்கிற கேள்வி இங்கு எழுகிறது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh