தமிழ் சினிமாவில் உள்ள பெரிய நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் கமல்ஹாசன் இருந்து வருகிறார். விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து கமல்ஹாசன் ஆக்ஷன் திரைப்படங்களாக நடித்து வருகிறார். ஏனெனில் விக்ரம் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்று தந்தது.
இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் தற்சமயம் தக் லைஃப் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து சில விஷயங்களை பேசியிருந்தார்.
அதில் பேசிய அவர் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என பேசியிருந்தார். இது கர்நாடகா மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தக் லைஃப் படத்தை வாங்குவது குறித்து யோசித்து வருகின்றனர் கன்னட திரைப்பட விநியோகஸ்தர்கள்.
கமல் கூறியதை ஏற்க முடியாது. எங்களுக்கு எங்கள் மொழி முக்கியம் என கூறியுள்ளனர் கன்னட விநியோகஸ்தர்கள்.