Cinema History
கடனுக்கு எல்லாம் பாட்டு எழுத முடியாது – ட்ரிக்காக கடனை கழித்த கண்ணதாசன்
தமிழ் திரையுலகில் மாபெரும் கவிஞராக இருந்தவர் கண்ணதாசன். ஒவ்வொரு படங்களுக்கும் மிக எளிதாக பாடல்களை எழுதி கொடுப்பவர்.

ஏ.வி.எம் நிறுவனத்திற்கு நிறைய பாடல்களை எழுதி தந்துள்ளார் கவிஞர் கண்ணதாசன். ஆனால் இடையில் ஏ.வி.எம் நிறுவனத்திற்கும் கண்ணதாசனுக்கும் இடையே கொஞ்சம் மன கசப்பு ஏற்பட்டது.
இதனால் வெகுநாட்களாக இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்தனர். இந்த பிரச்சனைக்கு முன்னர்தான் கண்ணதாசன் ஏ.வி.எம் செட்டியாரிடம் 25,000 ரூபாயை கடனாக வாங்கி இருந்தார்.
அந்த கடனை திரும்ப கொடுக்குமாறு ஏ.வி.எம் நிறுவனம் கண்ணதாசனுக்கு கடிதம் எழுதியது. அது பதில் அனுப்பிய கண்ணதாசன் அடுத்து நீங்கள் தயாரிக்கும் படத்திற்கு பாடல் எழுதி அதை கழித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜெமினி கணேசன் நடிப்பில் ராமு என்கிற திரைப்படத்தை தயாரித்தது ஏ.வி.எம் நிறுவனம். அதற்கு பாட்டு எழுத கண்ணதாசன் வந்துள்ளார். வந்தவர் ஏ.வி.எம் சரவணனிடம் “அப்பாக்கிட்ட சொல்லி ஒரு 25,000 ரூபாய் வாங்கிட்டு வா” என கூறியுள்ளார்.
“ஏற்கனவே கடனை கழிக்கதானே பாட்டு எழுத வந்தீர்கள். பிறகு மேற்கொண்டு கேட்கிறீர்களே” என கேட்டுள்ளார் ஏ.வி.எம் சரவணன்.
“காசு வாங்கிட்டு பாட்டு எழுதினாலே நல்லா வர மாட்டேங்குது. கடனுக்கு எழுதுனா எப்படிப்பா நல்லா வரும்” என கேட்டுள்ளார் கண்ணதாசன்.
இதனால் இன்னும் 25,000 ரூபாயை கண்ணதாசனுக்கு கொடுத்துள்ளது ஏ.வி.எம் நிறுவனம்.
