பழங்குடி மக்களின் அரசியலை பேசும் காந்தாரா சாப்டர் 1.. ட்ரைலரில் வெளியான கதை..!

கன்னட இயக்குனராக ரிசப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி பெரும் வசூலையும் வரவேற்பையும் கொடுத்த திரைப்படம்தான் காந்தாரா. யாருமே எதிர்பார்க்காத வகையில் கர்நாடகாவில் இருக்கும் ஒரு வட்டார தெய்வத்தின் கதைக்கு இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து அடுத்த பாகத்திற்கான முடிவு அப்பொழுதே எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்த பாகமான காந்தாரா சாப்டர் 1 என்னும் படத்தை வெகு நாட்களாகவே எடுத்து வந்து கொண்டிருந்தார் ரிஷப் ஷெட்டி.

இந்த படத்தின் கதைகளமானது காந்தாரா படத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதைகளை கொண்டிருக்கிறது. பஞ்சுருளி என்னும் தெய்வம் எப்படி இவர்களது கிராமத்திற்கு வந்தது என்கிற வரலாற்றை கூறும் வகையில் காந்தாராவின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த படத்தின் டிரைலர் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. பண்டைய காலங்களில் பேராசுகள் தங்களை விரிவுபடுத்திக் கொள்வதற்காக பல பழங்குடியின மக்களை அடிமைப்படுத்தி இருக்கின்றனர். இந்த அரசியலை பெரிதாக எந்த ஒரு படத்திலும் பதிவு செய்தது கிடையாது.

பெரும்பாலும் மன்னராட்சி என்று காட்டும் பொழுது சிறப்பான ஒரு விஷயமாக தான் அதை காட்டியிருப்பார்கள். ஆனால் முதல் முறையாக காந்தாரா சாப்டர் ஒன் திரைப்படத்தில் மன்னராட்சி காலங்களில் பழங்குடியின மக்களுக்கு நடந்த அநிதியை ஒரு பக்க கதையாக கொண்டு மறுபக்கம் அந்த அநீதியிலிருந்து இந்த குலதெய்வம் எப்படி அந்த பழங்குடி மக்களை காப்பாற்றுகிறார் என்பதாக கதை சொல்கிறது.

எனவே இந்த படம் முதல் பாகத்தை விட அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.