News
எம்.ஜி.ஆராக நடிக்கும் கார்த்தி – வரிசையா ஹிட் கொடுக்க ப்ளான் போல!
தற்சமயம் கார்த்தி நடித்து வெளியான மூன்று திரைப்படங்களுமே நல்ல வசூலை கொடுத்து விட்டன. விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என வரிசையாக ஹிட் கொடுத்த காரணத்தால் பட வாய்ப்புகளும் கூட இவருக்கு அதிகமாக கிடைக்க துவங்கிவிட்டன.

அந்த வகையில் அடுத்து கைதி 2, சர்தார் 2 ஆகிய படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவி வருகிறது. இதற்கிடையே நடிகர் கார்த்தி இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்திருந்தன.
அந்த படத்தின் கதை குறித்து சுவாரஸ்யமான சில தகவல்கள் வந்துள்ளன. அதாவது அந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு அந்நியன் படத்தில் வரும் விக்ரம் போல உடலுக்குள் இரண்டு கதாபாத்திரங்கள் இருக்குமாம். அதில் ஒன்று சாதரண கார்த்தியாகவும், மற்றொன்று எம்.ஜி.ஆர் கதாபாத்திரமாகவும் இருக்குமாம்.
எப்போதெல்லாம் கார்த்தி எம்.ஜி.ஆராக மாறுகிறாரோ அப்போதெல்லாம் அவரது பாவனைகள் எம்.ஜி.ஆர் போல இருக்குமாம்.
அதிகாரமற்ற தகவல் என்றாலும் இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கார்த்திக்கு ஒரு சவாலான திரைப்படமாக இந்த படம் இருக்கும். மேலும் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு இந்த படம் விருப்பமான படமாக இருக்கும்.
