ஹோம்லி வேலைக்கு ஆகாது.. க்ளாமரில் இறங்கிய கீர்த்தி சுரேஷ்!

இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழி படங்களில் பிஸியான நடிகையாக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ்.

தமிழில் ரஜினிமுருகன், பைரவா உள்ளிட்ட பல கமர்ஷியல் படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், “நடிகையர் திலகம்” படத்தில் சாவித்திரியாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

தற்போது “சாணி காயிதம்” படத்தில் பொன்னி கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளதாக கீர்த்தி சுரேஷை பலரும் புகழ்ந்து வருகின்றனர். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தாலும் கீர்த்தி சுரேஷுக்கு பட வாய்ப்புகள் சில காலம் முன்னர் வரை குறைவாகவே இருந்து வந்தது.

அதற்கு அவரது உடல் எடையும் காரணமாக சொல்லப்பட்டது. இந்நிலையில் உடல் எடையை வெகுவாக குறைத்த கீர்த்தி சுரேஷ் அடிக்கடி இன்ஸ்டாவில் க்ளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இதுவரை ஹோம்லியாகவே நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் “சர்காரு வாரி பாட்டா” படத்தின் மூலம் முழு க்ளாமரில் இறங்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்த “மா மா மகேசா” பாடலில் க்ளாமரான காஸ்ட்யூமில் கீர்த்தி சுரேஷின் டான்ஸ் ட்ரெண்டாகி வருகிறது. தொடர்ந்து இனி கீர்த்தி சுரேஷ் க்ளாமரான ரோல்களில் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Refresh