அடித்து நொறுக்கும் கே.ஜி.எஃப் டூஃபான் பாடல் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

வெளியாகி ஒரு மாதக்காலத்திற்கு ஆன பிறகு கூட திரையரங்குகளை விட்டு விலகாமல் இன்னும் வசூல் செய்து கொண்டிருக்கும் திரைப்படம் கே.ஜி.எஃப்.


இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வெளியான இந்த திரைப்படம் இந்திய அளவில் வெளியான ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வசூலை விட அதிக வசூல் சாதனை படைத்துள்ளது.


கே.ஜி.எப் முதல் பாகம், இரண்டாம் பாகம் இரண்டிலுமே ரவி பஸ்ரர் என்ற இசையமைப்பாளரே இசையமைத்துள்ளார். படத்தில் பல காட்சிகளில் நம்மை மயிர் கூச்செரிய செய்ததில் இவருக்கும் முக்கிய பங்குண்டு.


கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் இரண்டு மாஸ் பாடல்களும் ஒரு அம்மா பாடலும் இடம்பெற்றிருந்தது. அதே போல கே.ஜி.எப் இரண்டாம் பாகத்திலும் மூன்று மாஸ் பாடல், ஒரு அம்மா பாடல் மற்றும் ஒரு காதல் பாடல் என நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
ஏற்கனவே இதில் உள்ள அம்மா பாடலான அகிலம் நீ, காதல் பாடலான மேபூபா மற்றும் த மான்ஸ்டர் என்கிற மாஸ் பாடல் ஆகிய மூன்றும் வீடியோ பாடலாக வெளியாகி இருந்தது.


ஆனாலும் டூஃபான் என்கிற பாடலுக்கே ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு அந்த வீடியோ பாடல் வெளியாகியுள்ளது
இந்த பாடலுக்கு முன்பு சில மாஸ் டயலாக்குகள் இடம் பெறுவதால் இந்த பாடல் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.
Tags:

Refresh