இனிமே அவரை கன்னட ஹீரோவா ஏத்துக்க மாட்டோம் – ராக்கி பாய் குறித்து பேசிய தயாரிப்பாளர்

இந்தியாவில் மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியாகி 1000 கோடி தாண்டி ஹிட் கொடுத்த திரைப்படம் கே.ஜி.எஃப் 2. முதல் பாகத்திற்கு எந்த வித வரவேற்பும் இல்லாமல், இரண்டாம் பாகம் இப்படி ஒரு ஹிட் அடித்த ஒரு லோ பட்ஜெட் திரைப்படம்தான் கே.ஹி.எஃப் 2.

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வெளியான இந்த திரைப்படம் இந்திய அளவில் வெளியான ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வசூலை விட அதிக வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்த திரைப்படம் நடிகர் யஷ் மற்றும் திரைப்படத்தின் கதாநாயகி ஸ்ரீ நிதி ஷெட்டி, இருவருக்குமே பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து யஷ்ஷிற்கும் பட வாய்ப்புகள் அதிகமாக வந்துக்கொண்டுள்ளன.

Sultana

இந்நிலையில் இந்த படத்தில் தயாரிப்பாளரான விஜய் க்ரகந்தூர் ஒரு பேட்டியில் பேசும்போது “யஷ் இனி கன்னட படங்களில் நடிக்க வாய்ப்பில்லை. முதலில் அனைவரும் அவரை கன்னட ஹீரோவாக பார்த்தோம். ஆனால் அவர் இப்போது இந்தியாவின் நட்சத்திரமாகிவிட்டார். எனவே இனி அவர் நடித்தால் அதிக பட்ஜெட் உள்ள பான் இந்தியா படங்களில் மட்டுமே நடிக்க முடியும்” என கூறியுள்ளார்.

அடுத்து யஷ் கூக்ளி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

Refresh