Box Office
3 நாட்களிலேயே போட்ட காசை எடுத்த குடும்பஸ்தன் திரைப்படம்..! மொத்த வசூல் நிலவரம்.!
தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் மணிகண்டன். பெரும்பாலும் அவர் நடிக்கும் படங்களுக்கு எல்லாம் வரவேற்புகள் அதிகமாகவே இருந்து வருகிறது. அதற்கு காரணம் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட நடிப்பு திறனே ஆகும்.
ஜெய் பீம் திரைப்படத்திலேயே மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மணிகண்டன். இந்த நிலையில் அவருக்கு அந்த படத்தின் மூலம் அதிக பாராட்டுகள் கிடைத்தன. மேலும் அந்த படத்தை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைக்க துவங்கின.
இந்த நிலையில்தான் அவர் குட் நைட் திரைப்படத்தில் நடித்தார். குட் நைட் திரைப்படம் நல்ல படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து லவ்வர் என்கிற திரைப்படத்தில் நடித்தார் மணிகண்டன்.
தற்சமயம் அவர் குடும்பஸ்தன் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். குடும்பஸ்தன் திரைப்படமும் குட் நைட் மாதிரியே குடும்பங்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் மணிகண்டன் தேர்ந்தெடுக்கும் கதை களங்கள் எல்லாமே அவருக்கு நல்லப்படியான கதை களமாக அமைந்துவிடுகிறது.
இதனால் மக்களும் அவரது படத்திற்கு நம்பி வர துவங்கியுள்ளனர். இந்த நிலையில் முதல் நாளே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற துவங்கியது குடும்பஸ்தன் திரைப்படம். முதல் நாளே இந்த படம் 80 லட்ச ரூபாய் வசூல் செய்திருந்தது.
இந்த நிலையில் 3 நாட்கள் முடிவில் மொத்தமாக 7 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது குடும்பஸ்தன் திரைப்படம். இந்த படத்தின் பட்ஜெட்டே 4 கோடி ரூபாய் தானாம். ஏற்கனவே போட்ட காசுக்கு அதிகமாக லாபம் ஈட்டி தந்துள்ளது குடும்பஸ்தன் திரைப்படம்.
