முதல் நாளே வரவேற்பை பெற்ற குடும்பஸ்தன் திரைப்படம்.. வசூல் ரிப்போர்ட்!.

நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். அவரது சிறப்பான நடிப்பின் காரணமாக அவர் நடிக்கும் படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது. அவர் நடித்த குட் நைட் திரைப்படமே நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதனை தொடர்ந்து அடுத்து லவ்வர் என்கிற திரைப்படத்தில் நடித்தார் மணிகண்டன். அந்த திரைப்படம் அவருக்கு ஓரளவுதான் வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் நடிப்பில் குடும்பஸ்தன் என்கிற படம் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படமும் குட் நைட் போலவே ஒரு குடும்ப படமாக அமைந்துள்ளது. திருமணம் ஆகி நிறைய கமிட்மெண்ட்டில் இருக்கும் மணிகண்டனுக்கு இடையில் ஒரு பத்து மாதம் வேலை இல்லாமல் போகிறது. அதனை சரி செய்ய என்ன செய்கிறார் என்பதே கதையாக இருக்கிறது.

Social Media Bar

சாமானிய மனிதன் ஒரு குடும்பத்தை நடத்த படும் அவஸ்தைகளை விவரிக்கும் வகையில் இதன் கதை அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை நக்கலைட்ஸ் யூ ட்யூப் சேனல் டீம்தான் படமாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த திரைப்படம் முதல் நாளே 80 லட்ச ரூபாய்க்கு ஓடியுள்ளது. படத்தின் பட்ஜெட் மிகவும் குறைவு, மேலும் ஒரு மாதத்திலேயே இந்த கதையை படமாக்கி விட்டதாக கூறப்படுகிறது. எனவே கண்டிப்பாக இந்த வசூலே படத்திற்கு நல்ல வசூலாகதான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.