குந்தவை, நந்தினிய விட இது பெரிய Face off! சிவாங்கி – அமலாஷாஜி சந்திப்பு!

2கே கிட்ஸுக்கு மிகவும் பிடித்த இரண்டு இளம் பிரபலங்களான ஷிவாங்கியும், அமலாஷாஜியும் சந்தித்து கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.

தற்போதைய 2கே கிட்ஸ் இடையே மிகவும் பிரபலமாக உள்ளவர்களில் முக்கியமானவர் ஷிவாங்கி. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஷோ மூலம் பிரபலமான ஷிவாங்கி பல ஆல்பம்களிலும் தனது வசீகர குரலால் பல பாடல்களை பாடியுள்ளார். குக் வித் கோமாளி போன்ற ஷோக்களில் நகைச்சுவையிலும் கலக்கி வருகிறார்.

ஷிவாங்கி அளவிற்கு அதிகமான 2கே ரசிகர்களை கொண்ட மற்றுமொருவர் அமலாஷாஜி. கேரளாவை சேர்ந்த அமலாஷாஜி இன்ஸ்டா ரீல்ஸ் மூலமாகவே மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார். சொல்லப்போனால் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸுக்கு த்ரிஷாவும், ஐஸ்வர்யா ராயும்தான் குந்தவை மற்றும் நந்தினி என்றால் 2கே கிட்ஸுக்கு ஷிவாங்கியும், அமலாஷாஜியும்தான் குந்தவை, நந்தினி.

சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் அமலாஷாஜியும், ஷிவாங்கியும் சந்தித்து பேசிக் கொண்டனர். பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையும், நந்தினியும் சந்தித்துக் கொள்ளும்போது ஒரு பின்னணி இசை வரும். அந்த இசையை அவர்களது சந்திப்பு வீடியோவில் இணைத்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh