ரஜினி விஷயத்தில் பிரச்சனை வராது!. என்னை நம்புங்க!.. லாரன்ஸ் பஞ்சாயத்தை முடித்து வைத்த லோகேஷ் கனகராஜ்!..

லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து தமிழில் பெரும் நட்சத்திரங்களை வைத்து திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதற்கு தகுந்தாற் போலவே அடுத்தடுத்து வரும் திரைப்படங்களும் பெரும் நடிகர்களின் படங்களாகவே இருக்கின்றன.

இந்த நிலையில் தற்சமயம் ரஜினிகாந்தை வைத்து திரைப்படம் இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே இதற்காக அலுவலகம் அமைக்கப்பட்டு படத்திற்கான கதை குறித்த டிஸ்கஷன்கள் நடந்து வருகின்றன. ஆனால் தற்சமயம் வேட்டையன் திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் தா.செ ஞானவேல் படப்பிடிப்பை தாமதமாக்குவதால் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் வருவதற்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

lokesh rajini

இந்த நிலையில் லோகேஷின் நண்பரான இயக்குனர் ரத்னகுமார் லாரன்ஸை வைத்து ஒரு திரைப்படம் இயக்குவதற்கு இருந்தார். ஆனால் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் அவர் பேசும்போது ரஜினிகாந்தை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் பயங்கரமான ரஜினிகாந்தின் ரசிகர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. இந்த நிலையில் தனது தலைவரை இப்படி தாக்கி பேசிவிட்டாரே என ரத்னக்குமார் படத்திலிருந்து விலகிவிட்டார் ராகவா லாரன்ஸ்.

இந்த நிலையில் தற்சமயம் இந்த பிரச்சனைக்குள் லோகேஷ் கனகராஜும் வந்துள்ளார். ரஜினிகாந்தை குறித்து ரத்னகுமார் தவறாக எதுவும் பேசவில்லை. அந்த மேடையில் விஜய்யை புகழ்ந்து பேசவே அவர் அப்படி பேசினார் என கூறி லாரன்ஸை சமாதானப்படுத்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனையடுத்து லாரன்ஸ் நடிப்பிலேயே அந்த படம் வெளியாக இருக்கிறது.