TV Shows
யாரையுமே சேர விட மாட்டாங்க போல – விமர்சனத்துக்கு உள்ளாகும் வானத்தை போல சீரியல்..!
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு முக்கியமான பொழுது போக்காக டிவி சீரியல்கள் உள்ளன. ஆனால் அதில் அனைத்து சீரியல்களும் பெண்களுக்கு பிடித்த வகையில் அமைந்து விடுவதில்லை. மேலும் காதல் தொடர்பான சீரியல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும்போது காதலுக்கு எதிராக உருவாகி வரும் சில சீரியல்கள் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

அப்படியாக சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் வானத்தை போல சீரியல் பலரிடமும் விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் அண்ணன் தங்கைக்கு இடையே உள்ள பாசத்தை கருவாக கொண்டு நாடகம் ஆரம்பமானாலும் போக போக அதன் கதையே மாறிவிட்டது.
கதையில் துளசி, சின்ராசு என இரு கதாபாத்திரங்கள். இருவரும் அண்ணன் தங்கையாக இருக்கின்றனர். ஆரம்பத்திலேயே துளசி வெற்றி எனும் ஒரு நபரை காதலித்து அந்த காதல் இணையாமல் அவரது சொந்தக்கார பையனான ராஜ பாண்டிக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறார்.

தற்சமயம் அதே போல சின்ராசு சந்தியா என்கிற பெண்ணை காதலிக்க அவரை கட்டாயப்படுத்தி பொன்னி என்கிற பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால் பொன்னியோ வேறு ஒருவரை காதலிக்கிறார்.
இப்படி இந்த நாடகத்தில் யாரையுமே விருப்பப்பட்ட நபர்களுடன் சேர்த்து வைக்காத காரணத்தால் காதலர்கள் பலரும் இந்த நாடகத்திற்கு அதிருப்தி தெரிவிக்கின்றனர் என்றாலும் கூட இல்லதரசிகளுக்கு இந்த நாடகம் பிடித்த ஒன்றாகவே உள்ளது.
