Connect with us

லால் சலாம் கை கொடுக்கலை!.. கமலும் உதவலைனா லைக்கா நிலைமை அதோ கதிதான்!.. அட கொடுமையே!.

lal salaam lyca

Latest News

லால் சலாம் கை கொடுக்கலை!.. கமலும் உதவலைனா லைக்கா நிலைமை அதோ கதிதான்!.. அட கொடுமையே!.

Social Media Bar

Lyca Pictures: சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பிறகு தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் தயாரிப்பு நிறுவனம் என்று அனைவராலும் அறியப்படும் நிறுவனம் லைக்கா. ரஜினி விஜய் மாதிரியான பெரும் நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்கும் நிறுவனங்களை வைத்துதான் அவை பெரிய நிறுவனங்களா? என்பது தீர்மானிக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு இப்பொழுது கோட் திரைப்படத்திற்காக ஏ.ஜி.எஸ் நிறுவனம் விஜய்க்கு கொடுத்திருக்கும் சம்பளம் அவர்களது நிறுவனத்தைப் பொறுத்தவரை பெரிய தொகை. ஆனால் லைக்கா விற்கோ அல்லது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கோ அது பெரிய தொகையே கிடையாது.

லைக்காவிற்கு வந்த நிதி நெருக்கடி:

அப்படி இருந்தும் கூட தற்சமயம் லைக்கா நிறுவனம் பெரும் நிதி நெருக்கடிக்கு இடையில் மாட்டிக் கொண்டுள்ளதாக பேச்சுக்கள் இருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் லால் சலாம் திரைப்படம் என கூறப்படுகிறது.

50 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லால் சலாம் திரைப்படம் மிகக் குறைந்த அளவிலேயே வசூல் செய்தது என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட அந்த படம் தோல்வி படம் என்று கூறப்படுகிறது.

Lal-Salaam-3
Lal-Salaam-3

இருந்தாலும் ரஜினிகாந்தின் மனம் நோக கூடாது என்பதற்காக அந்த படத்திற்காக வெற்றி விழா எடுத்துள்ளனர் லைக்கா நிறுவனத்தினர். இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்திற்கும் எக்கச்சக்கமாக செலவு செய்திருக்கிறது லைக்கா நிறுவனம்.

எனவே இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை கொடுத்தால்தான் லைக்கா நிறுவனம் திரும்ப பழைய நிலைமைக்கு வர முடியும் என கூறப்படுகிறது. இந்த நிதி நெருக்கடியின் காரணமாக அஜித் நடிக்கும் விடாமுயற்சிக்கு தயாரிப்பு செலவுகளை செய்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எனவே அந்த படமும் தாமதமாகி வருகிறது எனவே இந்தியன் 2 திரைப்படம்தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே விடிவுகாலம் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top