இளசுகளை அலற விடும் இயக்குனர்! – அடுத்து வரவிருக்கும் புது திரைப்படம்!

தமிழகத்தில் விஜய் அஜித் மாதிரியான நட்சத்திரங்களின் படங்களுக்கு கூட்டம் நிரம்பி வழிவதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு ஜப்பான் அனிமேஷன் படத்திற்கு சென்னையில் கூட்டம் நிரம்பி வழிந்த கதை தெரியுமா?

ஆமாம் ஜப்பானில் மக்கோட்டோ ஷிங்காய் (Makoto Shinkai) எனும் பிரபல அனிமேஷன் இயக்குனர் ஒருவர் இருக்கிறார். ஜப்பான் மக்களே அவரது படத்திற்கு அதிக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

எங்கும் இணையம் வந்துவிட்ட இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் அதிகமான மக்கள் ஜப்பான் அனிமே திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பெரும்பாலும் இவரது திரைப்படங்கள் காதலை முன்னிலைப்படுத்தியே இருக்கும். இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு இவர் இயக்கிய Weathering With You என்கிற திரைப்படம் சென்னையில் வெளியானது. இந்த படத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

முக்கியமாக இளைஞர்கள் இந்த படத்திற்கு அதிக ஆர்வம் காட்டினர். தற்சமயம் மக்கோட்டோ ஷிங்காய் இயக்கிய suzume no tojimari என்கிற திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்தது.

இந்திய ரூபாயில் 632 கோடி வசூல் செய்தது. இதையடுத்து இந்த படம் இந்த மாதம் சென்னையில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மகோட்டோ ஷிங்காயின் ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர்.

Refresh