18 ஆண்டுகளாக விமான நிலையத்தில் வாழ்ந்த மனிதன் மரணம் – அவரது கதையை படமாக்கிய ஹாலிவுட்.!

இருப்பதற்கு வீடு, சொந்த நாடு என எதுவும் இன்றி கிட்டத்தட்ட 18 வருடங்கள் விமான நிலையத்திலேயே வாழ்ந்த மனிதரைதான் இப்போது பார்க்க போகிறோம்.

ஈரான் நாட்டை சேர்ந்தவர் மெர்ஹான் கரீமி நாசேரி. இவர் தனது தாயை தேடி பல நாடுகளுக்கு பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக பெல்ஜியம், இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து என பல நாடுகளுக்கு சென்றுள்ளார்.

ஆனால் அந்த நாடுகளில் குடியேறுவதற்கான சரியான ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பதால் அனைத்து நாடுகளும் அவரை புறக்கணித்தன. 1988 ஆம் ஆண்டு அவர் பிரான்ஸ்க்கு சென்றார். பிரான்ஸ் நகரின் தலைநகரமான பாரிசில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கினார்.

பாரீஸின் உள்ளே செல்வதற்கு அவருக்கு அனுமதி இல்லை. ஏனெனில் அவரிடம் எந்தவிதமான ஆவணங்களும் இல்லை. எனவே அன்று முதல் அவர் பாரீஸ் விமான நிலையத்திலேயே தங்கினார். அந்த விமான நிலையத்தையே தனது வீடாக்கி 18 வருடங்கள் அங்கே வாழ்ந்தார்.

ஏர்போர்ட்டில் சுத்தம் செய்யும் வேலை பார்த்துக்கொண்டும், புத்தகங்கள் படித்துக்கொண்டும் வாழ்ந்து வந்தார். அவரது கதையை கேட்டு வியப்பான ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் அவரது கதையை தழுவி த டெர்மினல்  என்கிற படத்தை இயக்கி வெளியிட்டார்.

இதன் பிறகு நாசேரி உலகம் முழுவதும் பிரபலமானார். பல பத்திரிக்கைகள் அவரை பேட்டி எடுத்தன. பிரான்ஸ் அவருக்கு அகதி அந்தஸ்தை கொடுத்தன. மேலும் டெர்மினல் படத்தின் லாபத்தில் ஒரு பங்கு அவருக்கு வழங்கப்பட்டது. அதை வைத்து வாழ்ந்து வந்த நாசேரி இன்று உயிரிழந்தார்.

இதனால் பிரான்ஸ் மக்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

Refresh