அஜித்துடன் முதல் தடவை ஜோடி சேரும் அசுரன் நடிகை! – ஏகே61 அசத்தல் அப்டேட்!

அஜித் நடித்து எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் “நேர்கொண்ட பார்வை”. இந்த படத்தை போனிக்கபூர் தயாரித்திருந்தார்.

அதை தொடர்ந்து மீண்டும் அஜித் – எச்.வினோத் கூட்டணியில், போனிக்கபூர் தயாரிப்பில் “வலிமை” படம் வெளியாகி ஹிட் அடித்தது.

இதனால் மீண்டும் மூன்றாவது முறையாக அஜித் – எச்.வினோத் கூட்டணியில் புதிய படம் தயாராகி வருகிறது. இந்த படத்தையும் போனிக்கபூரே தயாரிக்கிறார். தலைப்பிடப்படாத இந்த படத்திற்கு தற்போதைக்கு “ஏகே61” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க முன்னணி ஹீரோயின்களிடம் இயக்குனர் எச்.வினோத் பேசி வந்தார். இந்நிலையில் தற்போது அஜித்துக்கு ஜோடியாக நடிக்க மஞ்சுவாரியர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் பிரபலமான நடிகையான மஞ்சு வாரியர், தமிழில் அசுரன் படத்தில் நடித்திருந்தார். அதற்கு அடுத்த படமே தற்போது அஜித்துடன் நடிக்க உள்ளார்.

Refresh