ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர் – ஹீரோ யாரு தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் இயக்குனர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். வரிசையாக பட வாய்ப்புகள் வருகிற காரணத்தால் ஓய்வே இல்லாமல் பணி செய்துக்கொண்டுள்ளார். அடுத்த படம் குறித்து யோசிக்க முடியாத அளவிற்கு ஏற்கனவே பட வாய்ப்புகளை இவர் பெற்றுள்ளார்.

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தனது அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜை கொண்டு இயக்க இருக்கிறார்.

தற்சமயம் அந்த படத்திற்கான பேச்சுக்கள் போய்க்கொண்டுள்ளன. அதற்கு அடுத்ததாக நடிகர் கார்த்தியை கொண்டு கைதி 2 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த திரைப்படம் விக்ரம் 2 திரைப்படத்தோடு தொடர்புடையதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கு அடுத்ததாக விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகத்தையும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளார். இந்த படங்கள் இல்லாமல் நடிகர் ரஜினியை கொண்டு லோகேஷ் கனகராஜ் திரைப்படம் இயக்க உள்ளதாகவும் பேச்சுக்கள் உள்ளன

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்து லோகேஷ் கனகராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

அதாவது மாஸ்டர் படம் வெளியாகி ஹிட் கொடுத்த உடனே ஹிந்தியில் நடிகர் சல்மான்கான் அந்த திரைப்படத்தின் மீது ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் ஹிந்தி படத்தையும் லோகேஷ் கனகராஜ்தான் இயக்க வேண்டும் என சல்மான்கான் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் விக்ரம் திரைப்படத்தை இயக்க இருந்ததால் லோகேஷ் கனகராஜ் ”தற்சமயம் இயக்க முடியாது” என கூறியுள்ளார்.

எனவே வெறொரு இயக்குனரை கொண்டு படம் ஹிந்தியில் இயக்கப்படுகிறது என கூறப்படுகிறது.

Refresh