Latest News
வெளியானது “நானே வருவேன்” ஃபர்ஸ்ட் லுக்! – ரசிகர்கள் கொண்டாட்டம்!
தனுஷ் நடித்து செல்வராகவன் இயக்கியுள்ள “நானே வருவேன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகியுள்ளது.
தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் நீண்ட காலம் கழித்து உருவாகியுள்ள படம் “நானே வருவேன்”. புதுப்பேட்டை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன படங்களை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார்.