Cinema History
சைக்கோவாடா நீ.. படப்பிடிப்பில் விக்னேஷ் சிவன் செய்த காரியத்தால் கடுப்பான நயன்!..
தமிழ் சினிமாவில் காதல் திருமணங்கள் என்பது சினிமாவின் வரலாற்றில் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. சாவித்திரி ஜெமினி கணேசன் துவங்கி இப்போது இருக்கும் சினிமா வரை தமிழ் சினிமாவிற்குள் காதல் நிகழ்ந்து திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன
அப்படி தமிழ் சினிமாவில் வெகுகாலமாக பேசப்பட்டு சமீபத்தில் ஜோடியாகி இருப்பவர்கள் நடிகர் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஆவர். விக்னேஷ் அவனும் நயன்தாராவும் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போதுதான் சந்தித்து கொண்டனர்.
அப்போதுதான் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. சில வருடங்கள் இருவரும் காதலித்து வந்தனர் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் ஒரு பேட்டியில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்து இருந்தார் விக்னேஷ் சிவன். அப்போது கூறும்போது நானும் ரவுடிதான் திரைப்படத்தின் பாதி படப்பிடிப்பு சென்று கொண்டிருந்த பொழுதே நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் உருவாகிவிட்டது.
இந்த சமயத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவுக்கு முத்தம் கொடுப்பது போன்ற காட்சி ஒன்று படமாக்கப்பட இருந்தது. அப்பொழுது விக்னேஷ் சிவனிடம் பேசிய நயன்தாரா, அந்த முத்தக்காட்சி முத்தம் கொடுப்பது போலவே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதை கொஞ்சம் மாற்றி கூட எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.
ஏனெனில் விஜய் சேதுபதி நயன்தாராவுக்கு முத்தம் கொடுப்பது போல வருவது விக்னேஷ் சிவனுக்கு வேதனையை ஏற்படுத்தலாம் என நயன்தாரா நினைத்தார். ஆனால் விக்னேஷ் சிவன் விடுவதாக இல்லை. அவருக்கு அந்த காட்சி அப்படித்தான் வரவேண்டும் என முடிவு செய்து அப்படியே அந்த காட்சியையும் எடுத்தார்.
அந்த காட்சியின்படி நயன்தாராவின் முகத்திற்கு மிக அருகில் விஜய் சேதுபதியின் முகம் வருவது போன்று அந்த காட்சி அமைந்திருக்கும். அதை முடிந்த பிறகு விக்னேஷ் சிவனை பார்த்த நயன்தாரா சரியான சைக்கோ எனக்கூறி திட்டி உள்ளார் அதை விக்னேஷ் சிவனே அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.