vijay sethupathi

நடிகராவதற்கு முன்பு தினமும் நைட் அதை பண்ணுனேன்!.. சீக்ரெட்டை பகிர்ந்த விஜய் சேதுபதி!..

Cinema History Tamil Cinema News

சினிமாவில் அனைத்து கதாபாத்திரங்களையும் எடுத்து நடிக்கும் நடிகர்கள் கிடைப்பதுதான் அரிது. ஏனெனில் பெரும்பாலும் நடிக்கும் நடிகர்கள் தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களைதான் தேர்ந்தெடுத்து நடிப்பார்கள்.

அப்படியான நடிகர்களில் இருந்து முற்றிலுமாக மாறுப்பட்டவர்தான் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி அதற்கு பிறகு கதாநாயகனாக அறிமுகமானார். பெரும்பாலும் கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர்கள் பிறகு வில்லனாக நடிக்க மாட்டார்கள்.

ஆனால் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்தார். சொல்லப்போனால் ஹீரோவாக நடிக்கும் படத்தை காட்டிலும் வில்லனாக அவருக்கு நல்ல மதிப்புக் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகமாகவே இருந்து வருகிறது.

vijay_sethupathi
vijay_sethupathi

சினிமாவிற்கு போராடிய காலத்தில் அவரது அனுபவம் குறித்து தனது பேட்டியில் கூறியுள்ளார் விஜய் சேதுபதி. அதில் அவர் கூறும்போது சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காலத்தில் சில நாட்கள் வெளிநாட்டில் சென்று பணிப்புரிந்தேன்.

அப்போது எதேர்ச்சையாக ஒரு கார்ட்டூன் தொடர் பார்த்தேன். அதில் வரும் கதாபாத்திரம் நான் பறவையாக வேண்டும் என சொல்லிக்கொண்டே இருக்கும். ஒரு நாள் அது பறவையாகி விடும். அதே போல நானும் தினசரி தூங்க செல்லும்போது நான் ஒரு நடிகனாக வேண்டும் என சொல்லி கொண்டே இருந்தேன்.

அதை ஏன் செய்தேன் என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் செய்ய வேண்டும் என தோன்றியது. அதே போல ஒரு சமயத்தில் உண்மையில் நடிகன் ஆனேன் என்கிறார் விஜய் சேதுபதி.