முழு உழைப்பை தறேன்.. மீதி உங்க பொறுப்பு! – நெல்சனை நம்பிய விஜய்!

பீஸ்ட் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் விஜய் தன்னிடம் சொன்ன விஷயங்களை இயக்குனர் நெல்சன் பகிர்ந்துள்ளார்.

Beast
Beast

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கி வெளியாகிறது பீஸ்ட் திரைப்படம். நாளை வெளியாகும் இந்த படத்திற்கு முன்பதிவுகள் ஒருவாரம் முன்னதாகவே முடிவடைந்த நிலையில் படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

அதற்குள்ளாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டு வரும் ப்ரோமோ வீடியோக்கள் ரசிகர்களை மேலும் எதிர்பார்ப்பை எகிற செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் படம் குறித்து பேசிய நெல்சன் “இந்த படத்தின் கதையை முதன்முதலில் விஜய் சாரிடம்தான் சொன்னென். கதையை கேட்டவர் “என் முழு உழைப்பையும் நான் தரேன்.. மத்ததை நீங்கதான் பாத்துக்கணும்” என்று சொன்னார். அவர் என்மீது வைத்திருந்த நம்பிக்கையை என்னால் முடிந்த அளவு சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறேன். நிச்சயமாக இந்த படம் உங்களுக்கு பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Refresh