மாயாஜால உலகமும்.. சயின்ஸ் ஃபிக்சன் உலகமும்.. ரெண்டு பேர் விளையாடும் வகையில் வந்த அசத்தலான விடீயோ கேம்.. Split Fiction Game Review

கேமர்களை பொறுத்தவரை ஒருவர் தனித்து கேம் விளையாடுவதை விடவும் இன்னொருவருடன் சேர்ந்து விளையாடுவதையே அதிகம் விரும்புகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் வெளியான Split Fiction என்கிற கேம் இப்போது வரவேற்பை பெற துவங்கியுள்ளது.

இந்த கேம் இருவர் சேர்ந்து விளையாடும் கேம் ஆகும். ஒருவர் மட்டும் இதில் விளையாட முடியாது. இந்த வீடியோ கேமை Hazelight Studios என்னும்  நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. PlayStation 5, Xbox Series X and Series S, Nintendo Switch 2, GeForce Now, Microsoft Windows ஆகிய சாதனங்களில் விளையாடும் வகையில் இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.

Social Media Bar

வீடியோ கேமின் கதைப்படி மியோ மற்றும் சோயி என இரண்டு எழுத்தாளர்கள் உள்ளனர். மியோ ஒரு அறிவியல் கதையும், சோயி ஒரு மாயாஜால கதையையும் எழுதியுள்ளார். அதனை வெளியிடுவது தொடர்பாக ரேடார் பப்ளிஸிங் என்கிற நிறுவனத்தை அணுகுகின்றனர்.

இந்த நிலையில் ரேடார் பப்ளிஸிங் ஒரு கருவியை கண்டறிந்துள்ளது. அது எழுத்தாளர்களை அவர்கள் எழுதிய கதைக்குள்ளேயே பயணிக்க வைக்கிறது. சோயி மற்றும் மியோ இருவரும் இந்த மிஷினில் சிக்கி கொள்கின்றனர். இதனை தொடர்ந்து இவர்கள் இருவரின் உலகமும் அந்த கதையில் மாறி மாறி வருகிறது.

அதிலிருந்து எப்படி அவர்கள் வெளிவர போகிறார்கள் என்பதாக இதன் கதை இருக்கிறது.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.